பட்டாவில் பெயர் திருத்த 12 ஆயிரமா? வசமாக சிக்கிய மன்னார்குடி மண்டல துணை வட்டாட்சியர் கைது - திருவாரூர் விஜிலென்ஸ் அதிரடி!




திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் கோவி சக்திவேல்.51 வயதான இவர் திமுக வார்டு செயலாளர். இவரது மனைவி சித்ரா ரேவதி. 45 வயதான இவர், 7 வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர். இந்தநிலையில், கோவி சக்திவேல், தனது மனைவி சித்ரா பெயரில் உள்ள பட்டா ஒன்றில் பெயர் திருத்தம் மேற்கொள்ளுவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அதனை பரிசீலனை செய்த மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ், பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய 15 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோவி சக்திவேல், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்க, அவர்களது ஆலோசனை பேரில் கோவி சக்திவேல் 15 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது, அங்கிருந்த துணை வட்டாட்சியர் நாகராஜுவிடம் பட்டாவில் பெயர் திருத்த நீங்கள் கேட்ட பணம் என்று கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி பூரணி தலைமையிலான இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நகராஜூவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து நாகராஜ் மற்றும் அலுவலகத்தில் இருந்த மற்ற அதிகாரிகளிடமும் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post

Contact Form